தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிகழு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் விஷ்ணு விஷால் இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
மேலும் இவருடைய திரைப்படங்களுக்கு தற்போது இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
இவர் சினிமாவில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து அவர் வயிற்றில் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது புகைப்படத்தை நியூ இயர் ஸ்பெஷலாக உடம்பை கட்டுக்கோப்பாக வயிற்றில் சிக்ஸ் பேக் காட்டி எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் விஷ்ணுவிஷாலா இது என வியந்து பார்த்து வருகிறார்கள்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.