நடிகர் விஷ்ணு விஷால் தனது வாழ்க்கையில் மன அழுத்தத்தில் சிக்கிய தருணங்களைப் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு மீண்டதைப் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் சுவாரஸ்யமான பர்சனல் பக்கங்கள் பற்றி பேசுவதற்கு எந்த பிரபலமும் தயங்க மாட்டார்கள் ஆனால் சோகமும் வெறுமையும் அதிகமாக இருக்கும் தங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் பற்றி சிலர் மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள், தமிழ் திரையுலகில் பல நட்சத்திரங்கள் மனதளவில் பாதித்த அனுபவித்த சிக்கல்களைப் பற்றி பெரும்பாலும் வெளியே சொல்ல தயங்குவார்கள்.
இதற்கு நேர்மாறாக நடிகர் விஷ்ணு விஷால் தனது வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் பாதித்தது பற்றியும் அதிலிருந்து எப்படி மீண்டதுபற்றியும் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். விஷ்ணு விஷ்ணு திருமண உறவு 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது, அந்த சமயத்தில் விஷ்ணு விஷால் தனக்கும் தனது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு தனது பர்சனல் பற்றி வெளியில் எந்த ஒரு பேட்டியிலும் பேசவில்லை, இந்த நிலையில் தனது வாழ்க்கையில் இருண்ட பக்கம் பற்றி பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார், அவர் எழுதியுள்ள கடிதத்தில் என்னை பற்றி சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், எனது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது, எல்லாரையும் போல் எனக்கும் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தன, ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிகவும் கடினமாக இருந்தது.
அந்த இரண்டரை ஆண்டுகள் தான் எனது வாழ்க்கையில் இருட்டாக இருந்தது அவற்றைப் பற்றி பேச இதுதான் சரியான நேரம், ஒருகாலத்தில் எனது சினிமா பயணம் நன்றாக போய்க் கொண்டிருந்தது ஆனால் பர்சனல் வாழ்க்கையோ மிகவும் கீழே போய்க் கொண்டிருந்தது. 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 2017 ஆம் ஆண்டு நானும் என் மனைவியும் பிரிந்தோம், அந்த பிரிவு தான் என்னையும் எனது மனைவியும் தனித்தனி வீடுகளில் வாழ வைத்தது.
பிறந்து சில மாதங்களே ஆன எனது மகனிடமும் இடைவெளியை உருவாக்கியது என் வாழ்க்கை இவ்வளவு மோசமாக மாறும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை, குடிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு இரவும் நான் மனதளவில் உடைந்து அழும் வரையில் குடித்தேன், மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை நோயாளியாக ஆக்கியது, அதனால் ஒரு சர்ஜரியும் செய்ய வேண்டி வந்தது.
அதேபோல் என் திரையுலக வாழ்க்கையில் பிரச்சனையை சந்தித்து வந்தனர், எனது படங்கள் மோசமான ரிலீஸ் தேதிக்கு கார்னர் செய்யப்பட்டன, அதேபோல் சில காலங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட எனது தயாரிப்பு நிறுவனமும் நஷ்டத்தை தான் சந்தித்தது எனது தயாரிப்பில் தொடங்கிய படத்தை 21 நாட்கள் சூட் செய்யப்பட்ட நிலையில் கைவிட்டேன். பின்பு கார்டன் திரைப்பட சூட்டிங்கில் எனக்கு மோசமான காயம் ஏற்பட்டது, அதனால் இரண்டரை மாதம் படுத்த படுக்கையாக இருந்தேன் எனது உடல் எடையும் 11 கிலோ அதிகரித்தது.
அதனால் எனக்கு எட்டு படங்கள் சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்க இருந்த படங்கள் கைவிடப்பட்டன வாழ்க்கையில் எதுவுமே சரியாக போகவில்லை. ராட்சசன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் விவாகரத்து, குழந்தை பிரிவு, உடல்நிலை பின்னடைவு, பொருளாதார இழப்பு, சூட்டிங்கில் ஏற்பட்ட காயம், குடிப்பழக்கம், உடல் எடை அதிகரிப்பு ,என என் வாழ்க்கையின் அடித்தளத்தில் போய்விட்டேன். பின்பு தான் எனது வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தீர்மானித்தேன் மருத்துவ உதவியை நாடினேன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றேன்.
அதன் பின்பு ஒரு ப்ரொபஷனல் ட்ரெயினர் இடம் பயிற்சி எடுக்க தொடங்கினேன், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறினேன் குடிப்பழக்கத்தை குறைத்தேன் யோகா பயிற்சி செய்தேன், எனது குடும்பத்திடம் மற்றும் என் மனநிலையை மோட்டிவேட் செய்யும் நண்பர்களிடம் மட்டும் அதிக நேரத்தைச் செலவழித்து என்னை பற்றி என் வேலையைப் பற்றி மட்டுமே யோசிக்க தொடங்கினேன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 16 கிலோ எடையை குறைத்து மீண்டும் வலிமையாக அடுத்த பட சூட்டிங்கிற்கு தயாராகிவிட்டேன்.
என்னைப்போல் பலரும் தங்கள் வாழ்க்கையில் கடினமான தருணங்களை சந்தித்துக் கொண்டிருக்கிளாம் ஆனால் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் எந்த நேரத்திலும் துள்ளிக்குதித்து மீண்டு எழ முடியும் எப்பொழுது நேர்மறையாக சிந்தியுங்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் உடல் நலம் எப்பொழுதும் மனதை மேம்படுத்தும் இதை நான் நேரடியாக அனுபவித்து இருக்கிறேன்.
எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்கப்போகிறேன். என கூறியுள்ளார்.