தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது பெண் இயக்குனர் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் இருவரும் இணைந்து ராட்சசன் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணையவுள்ளார்கள். தமிழில் வெளியான சிலுக்குவாருபட்டி, ஏலா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம் தற்போது மின்மினி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பொதுவாக ஹலிதா தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே உண்மையாகவே ஒரு பீரியட் படத்தை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மின்மினி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரங்களுடன் தொடங்கியது. முதல் பாதி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அந்த குழந்தைகள் நட்சத்திர இளைஞர்களாக வளர்வதற்கு 6 வருடங்கள் காத்திருந்து தற்போது இரண்டாம் பாதியை இயக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் இந்த கதை இவர்கள் இருவருக்கும் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இவரை தற்போது தகவல் வெளிவந்துள்ள நிலையில் இவர்கள் இணைந்து நடித்த ராட்சசன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது எனவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.