நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இவர் முதலில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் தனது விடாமுயற்சியால் அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
என்னதான் சினிமாவில் வெற்றி பெற்றாலும் வாழ்க்கையில் இவர் சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார். விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் விஷ்ணு விஷாலின் சில நடவடிக்கையால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனால் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டார் தற்பொழுது விஷ்ணு விஷாலின் மகன் ரஜினியுடன் தான் தனியாக வசித்து வருகிறார்கள். ஆனால் விஷ்ணு விஷால் விவாகரத்துச் செய்தவுடன் அடுத்த காதலியை தேடிக்கொண்டார் ஜிவாலா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதலில் நண்பர்கள் என கூறிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து அவர்களிடம் கேட்டபோது மௌனம் காத்து வந்த இருவரும் பின்பு காதலிப்பதாக கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேட்டி ஒன்றில் விஷ்ணுவிஷால் கூறியிருந்தார்.
அப்படி தான் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வந்தார் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்களும் குடும்பத்தார் அவர்களும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வந்தாலும் சில ரசிகர்கள் நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என அறிவுரை கூறி வருகிறார்கள்.