சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.! இந்த ஹீரோ மாற்றப்பட்டாரா?

siragadikka aasai

siragadikka aasai; விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் அறிமுகமாகிய டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் இருந்து வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் வாரம் வாரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அப்படி தற்பொழுதுதான் கதைகளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு திடீரென இந்த சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகர் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் புதுமுக நடிகர் நடிகைகளுடன் ஒளிபரப்பானாலும் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி நல்ல வரவேற்பினை பெற தொடங்கியது.

அப்படி தற்பொழுது பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட முத்து, மீனா சமீப காலங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து முத்துவின் அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் இவர் ரோகினி என்ற திருமணமானவரை கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.

அதாவது, ரோகிணி தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து இருக்கிறார். இது தெரியாமல் விஜயா அவருடைய மூத்த மகன் இருவரும் ஓவராக ஆட்டம் போட்டு வருகின்றனர். இவ்வாறு விறுவிறுப்பான கதைகளத்துடன் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

siragadikka aasai
siragadikka aasai

எனவே ஹீரோ மாற்றப்படுகிறார் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் சிறகடிக்க ஆசை சீரியல் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் ஹீரோவாக விஷ்ணுகாந்த் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விவாகரத்து பிரச்சனையில் இருந்து வெளிவந்த விஷ்ணுகாந்த் தற்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார்.