ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் விஷாலின் எனிமி.! ரெண்டு படத்தோட மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்.

enemy-and-annathaa
enemy-and-annathaa

சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் நடித்து வருகிறார் தற்போது கூட இவர் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி ரேஸில் கலந்து கொண்டுள்ளது.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர தற்போது படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியீட்டு அசத்திவருகிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை பின்னணியாக கொண்டு உருவாகி இருப்பதால் நிச்சயம் தீபாவளி சூப்பர் ஸ்டார் தீபாவளியாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த தீபாவளிக்கு அண்ணாத்த படத்தை உடன் மாநாடு திரைப்படம் முதலில் மோத இருந்தது என்ன காரணமோ தெரியவில்லை திடீரென தனது தேதியை மாற்றி கொண்டு தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியது. யார் வராங்க இல்லையோ நாங்க வரும் என்பது போல ரஜினியின் அண்ணாத்த படத்துடன் விஷாலின் எனிமி தீபாவளி ரேஸில் கலந்து கொண்டு மோத உள்ளது.

இந்த நிலையில் யு/ ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் என தெரியவந்து உள்ளது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் யு/ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த திரைப்படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது.

நிச்சயம் இந்த இரண்டு திரைப்படங்களில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு நல்ல வசூல் வேட்டையும் நடத்த வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.