விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படமும் நடிகை சமந்தாவின் புதிய திரைப்படமும் ரிலீசாகும் தினத்தில் தன்னுடைய படத்தை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஷாலுக்கு காயங்கள் பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அப்படி இருக்கையில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தன்னுடைய அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளத்தில் விஷால் அறிவித்துள்ளார். அதனால் இந்த திரைப் படத்தின் பிரமோஷன் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதேபோல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா என்ற திரைப்படம் நான்கு மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் மற்றும் சமந்தா உடன் நேரடியாக விஷால் மோத முடிவு செய்துவிட்டார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தை வினோத் குமார் என்பவர் தான் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார் இந்தநிலையில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷால்.