தமிழ் திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. அப்படி நடிகர் விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி பல டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணினாலும்..
தளபதி விஜயை வைத்து படம் பண்ணாதது அவருக்கு ஒரு ஏக்கமாகவே இருந்துள்ளது. அதை நிறைவேற்ற விஜய் இடம் ஒரு கதையை கூறி இருக்கிறார் ஆனால் அந்த கதையின் முதல் பாதி சூப்பராக இருக்கிறது இரண்டாவது பாதியில் சில மாற்றங்கள் செய்யுங்கள் என கூறி இருக்கிறார் உடனே இயக்குனர் சுந்தர் சி கதையில் மாற்றம் செய்யாமல்..
மற்ற டாப் ஹீரோவான விஷால் இடம் அந்த கதையை கூறி படமாக எடுத்துள்ளார் அந்த படம் பிளாப் ஆனது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சுந்தர் சி விஜய் இடம் சொன்ன கதை தான் ஆக்சன் இந்த கதையில்தான் இரண்டாவது பாதியில் மாற்றம் செய்ய சொன்னார் ஆனால் அவர் செய்யாமல் விஷாலிடம் கூறினார்.
2019 ஆம் ஆண்டு இந்த ஆக்சன் படம் வெளிவந்தது படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை தழுவியது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும்..
இரண்டாவது பாதியில் அந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை இதுவே இந்த படம் தோல்வியை சந்தித்ததற்கு காரணமாக அமைந்தது விஜய் நல்லவேளை இந்த படத்தில் நடிக்காமல் எஸ்கேப் ஆனது பெரிய விஷயம் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.