விஷாலை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் நடிகை.! தலைவர் மேல எல்லா நடிகைகளும் இன்னும் காண்டுலதான் இருக்காங்களா

kayathri-2
kayathri-2

சென்னையில் கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் மீது பல தவறான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளிக்கு போனால் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற காரணத்தினாலும் மாணவர்களின் அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது வழக்கம்.

ஆனால் தற்பொழுது உள்ள சில பள்ளிகள் அப்படி கிடையாது அந்த வகையில் ஒன்றுதான் பிஎஸ்பிபி பள்ளி.  இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

அதோடு பல சங்கடமான கேள்விகளை கேட்டதாகவும் ஆன்லைன் கிளாசின் பொழுது வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வகுப்பு எடுத்ததாகவும் மாணவிகள் ஆசிரியரின் மீது புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தற்போது ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்காக பலர் தங்களது கருத்துகளை கூறி வருகிறார்கள். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பிஎஸ்பிபி பள்ளியின் மீதும் மற்றும் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரின் மீதும் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

அந்தவகையில் நடிகர் விஷால் பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் நடந்துகொண்டது என்னை பயமுறுத்துகிறது. அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்பதை உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவரின் பெற்றோரிடமோ இதுவரையிலும் அந்த நிறுவனத்தில் இருந்து யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே பிஎஸ்பிபி பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

விஷாலுக்கு கூறும் வகையில் நடிகை காயத்ரி ரகுமான் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமா துறையில் உள்ள நீங்கள் முதலில் அங்கு நடக்கும் கேவலமான செயலை பாருங்கள் புதிதாக அறிமுகமாகும் பெண்களுக்கு என்னென்ன நடக்கிறது தெரியுமா? முன்னணி நடிகைகளின் மீதான துன்புறுதலையும் பாருங்கள்.

பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிய நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள்தான். உங்களாலும் பல பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். உங்களின் உண்மையான அணுகுமுறையின் காரணமாக தான் பல பெண்கள் உங்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுமான்.