தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள் அவர்கள் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாகவும் ஹீரோவாகவும் கலக்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் தான்.
அந்த வகையில் நடிகர் விஷால் அவர்களும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஆனால் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவர் சினிமாவில் முதன் முதலாக பாண்டியராஜ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார்.
மேலும் விஷால் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி இரண்டாவது பாகம் திரைப்படமும் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் விஷாலுடன் 15 வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு நடிகை மீண்டும் அவருடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது வேற யாரும் கிடையாது கடந்த 2006ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகிசிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸ் தான்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார் விஜய் நடிப்பில் வில்லு திரைப்படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார். சிவப்பதிகாரம் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் குசேலன் திரைப்படத்திலும் அருண் விஜய்யின் தடையற் தாக்க திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.