அல்வா துண்டு மாறி கிடைச்ச வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன் வெளிப்படையாக பேசிய விஷால்.! படம் ரிலீஸ் ஆனா இன்னும் அழுவீங்க.. கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

vishal
vishal

Actor Vishal: நடிகர் விஷால் லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததாக கூறியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றினை பெறாமல் இருந்து வருகிறது.

மேலும் விஷால் குறித்து ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகுவது வழக்கம். இந்நிலையில் சமீப பேட்டியில் நடிகர் விஷால் லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதனால் என்னால் லியோ படத்துக்காக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

தற்பொழுது விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சென்னையில் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் விஷால், இயக்குனர் ஆதிக்கின் நிஜமாவே சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15லிருந்து தான் துவங்கப் போகிறது இதற்கு முன் அவர் பயணித்தது எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க நடத்திய போராட்டமே விருதுகளில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இருந்தது இல்லை எனக்கு விருது கொடுத்தால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டேன் நடுவர் குழு என பத்து பேர் படம் பார்த்து கருத்து சொல்வார்கள் என்றால் அது அவர்கள் கருத்து மட்டும்தான் ஒட்டுமொத்த மக்களின் கருத்து அல்ல.

நான் இந்த 19 வருட திரையுலகில் இருக்கிறேன் என்றால் அதுதான் எனக்கு கிடைத்த விருது நல்ல நடிகர் யார் என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் லியோ படத்துக்காக கால் சீட் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

அப்பொழுது லோகேஷிடம், நீ அதிர்ஷ்டக்காரன்.. உனக்கு மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள்ள.. நானும் அடுத்ததாக விஜயை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி வருகிறேன் என்றேன். அரசியலுக்கு நேரடியாக வந்து நான் நல்லது செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அதே சமயம் மக்களிடம் சென்ற நியாயமாக கோரிக்க வைத்து தேர்தலிலும் போட்டியிடலாம் ஆனால் அதை நான் விரும்பவில்லை.

அதற்காக தேர்தல் குறித்து பயமும் இல்லை. 2006ல் நான் நடிக்க வந்த புதிதில் நடிகர் ராதாரவி ஒருநாள் என்னை அழைத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து விடு என பணம் கட்டி சேர வைத்தார். ஆனால் பின்னாலில் அவரையே நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்து போராடிவிட்டு அவருடைய நாற்காலிலேயே அமர்வேன் என்று அப்பொழுது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என கூறியுள்ளார்.