நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தலைகாட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆரம்பத்தில் இவரது படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல் கூட்டம் கூட்டமாக இவரது படத்தை பார்க்க குடும்பங்கள் திரையரங்கை நோக்கி படை எடுத்தது ஒரு காலம்.
ஆனால் சமீபகாலமாக இவரது ஆக்ஷன் திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறாமல் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தீபாவளியை முன்னிட்டு விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைய வேண்டும் என்பதே விஷால் மற்றும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் துப்பறிவாளன். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த படம் வசூல் வேட்டை அள்ளியது இந்த திரைப்படம் விஷால் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாகவும் அமைந்தது. அவருடன் இணைந்து பிரசன்னாவும் நல்ல ரோலில் நடித்திருந்தார் இந்த படம் இரண்டாம் பாகம் எடுக்கும் என மிஷ்கின் மற்றும் விஷால் ஆகியோர் தெரிவித்தனர்.
சூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது இடையில் விஷாலுக்கும், இயக்குனர் மிஷ்கின்னுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் மிஷ்கின் இந்த படத்தின் பாதியிலேயே விலக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து இந்த படத்தையும் நான் எடுப்பதாக விஷாலும் அறிவித்திருந்தார். இதுவரை அந்த படம் அடுத்து எடுக்கப்படும் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இப்படி இருந்து வந்த நிலையில் சமீபத்தில் துப்பறிவாளன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த விஷால் நான் இந்த திரைப்படத்தை வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்க இருக்கிறேன் அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரலில் படம் ரிலீஸ் செய்யப்படும் என அவர் கூறி உள்ளதால் ரசிகர்கள் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.