தமிழ் சினிமாவில் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஷால் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன. இந்த நிலையில் வினோத்குமார் இயக்கத்தில் நந்தா தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லத்தி.
இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளார்கள். இன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் அதிகாலை காட்சி திரையரங்கில் ஒலி பரப்பப்பட்டது படத்தைப் பார்த்த நெட்டிசன்ங்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதள பக்கமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
அதில் ஒரு நெட்டிசன் படம் அருமையாக இருந்ததாகவும் பேக்ரவுண்ட் மியூசிக் தரமாக இருந்ததாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் விஷாலின் நடிப்பு வேற லெவல் எனவும் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு எனவும் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்துள்ளார்கள் எனவும் பதிவு செய்துள்ளார்.
மேலும் விஷால் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார்.
இது குறித்து பேட்டியில் விஷாலும் லோகேஷ் கனகராஜ் கேட்டது உண்மைதான் ஆனால் எனக்கு நிறைய கமிட்மெண்ட் இருக்கிறது எனவும் அதை எல்லாம் முடித்துவிட்டு தான் என்னால் வேற திரைப்படத்தில் நடிக்க முடியும் என்பது போல் மழுப்பி உள்ளார். ஒருவேளை கண்டிப்பாக விஷால் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளாரா இல்லையா என்பது படத்தின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
#Laththi – Premise, BGM and even @VishalKOfficial 's terrific performance didn't help the movie. 144mins runtime looked a bit more for the plot they have taken. Could've been much much better given the technicians involved. Not satisfied ☹️ Good in parts!
— Kumarey (@Thirpoo) December 22, 2022
#Laththi My Review: 🔥ACTION PACKED🔥
Rating: ⭐⭐⭐⭐@VishalKOfficial delivers yet another stunner with his stunts..
Mesmerizes you with great stunts in later half of the movie 💯@TheSunainaa looks pretty😍@thisisysr has hit the rock bottom with his BGM and songs.
💥WINNER💥 pic.twitter.com/hHBEAVs7nE— Tamil Memes (@TamilFunnyMemes) December 22, 2022
#Laththi " @VishalKOfficial Anna 🤩🔥❤ Vera maari acting
Enaku pidichirukku rombaEllaruda performance 👏 is very best @nandaa_actor @TheSunainaa 🥰@dir_vinothkumar best direction 👐#LaththiFromToday #Laththireview
— Mohamed rifai (@actor_rifai) December 22, 2022