தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எதிர்த்து போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்து வைரலாக பதிவு வருகிறது.
அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக வலிமையான ஒரு போட்டியாளரை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி இப்படி ஒரு முடிவை எடுத்ததன் காரணமாக உடன் உள்ள கட்சி நிறுவனர்கள் அனைவரும் தனது கட்சியாளரான விஷாலை பலரும் பரிந்துரை செய்துள்ளதாகவும் இவ்வாறு விஷாலை அவருக்கு எதிராக நிறுத்தினால் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி கேள்விக்குறியாக மாறிவிடும் என கூறியுள்ளார்கள்.
நடிகர் விஷால் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார் அந்த வகையில் சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம் பகுதியில் தான் விஷால் தந்தை அவர்கள் கிரானைட் தொழில் செய்து வருகிறார்கள் இதன் காரணமாக விஷாலின் தந்தை அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து விஷால் அந்த இடத்தில் போட்டியிட அதிக அளவு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து விஷால் அவர்கள் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுவதை பற்றி விஷாலின் தந்த இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் மிக விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.