கிழிந்த சட்டையுடன் ரத்தம் சொட்ட சொட்ட காயங்களுடன் விஷால்.! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

Vishal-Injured
Vishal-Injured

விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்கச் வைத்துள்ளது இந்த நிலையில் விஷால் நடித்து வரும் லத்தி திரைப்படத்தின் இறுதி சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

விஷால் திரைப்படம் என்றாலே ஆக்சன்களுக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவு ஆக்ஷன் கலந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.அதே போல் ஹைட்டும் வைட்டும் ஆக்ஷன் கதைக்கு ஏற்ற அம்சங்களாக இருக்கிறார். இவர் முதன்முதலில் நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து த்ரில்லர் திரைப்படமான செல்லமே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகி சண்டைக்கோழி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இதனைத்தொடர்ந்து அதேபோல் ஆக்ஷன் திரைப்படமான திமிரு, தாமிரபரணி மலைக்கோட்டை என தொடர்ந்து நடித்து வெற்றி கண்டு வந்தார்.

மேலும் விஷால் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் களமிறங்கினார் அந்த வகையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் பாண்டியநாடு நான் சிகப்பு மனிதன், பூஜை ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். இந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய எனிமி திரைப்படம் அன்னாத திரைப்படத்தின் பொழுது வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது வீரமே வாகை சூடவா, துப்பறிவாளன் 2, லத்தி ஆகிய திரைப்படங்களை தனது சொந்த தயாரிப்புகளில் நடித்து வருகிறார். மேலும் வீரமே வாகை சூடவா திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் இந்த திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

அதேபோல் கத்தி திரைப்படமும் படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில் இருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சியின்போது விஷாலுக்கு காயம் ஏற்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி வீடியோவை விஷால் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உடன் விஷால் கிழிந்த காறக்கிசட்டையும் உடம்பில் ரத்த காயங்களுடன் காட்சியளிக்கிறார் இதோ அந்த வீடியோ.