தளபதி விஜய் அண்மை காலமாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக விஜய் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் தளபதியுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என ஒரு மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளாக நடித்து வருகிறது இந்த படத்தின் இறுதி கட்டப்பட படிப்பு சென்னையில் கோலாகலமாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.
இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆகிறது இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். விஜய் வருவதற்குள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தட்டி தூக்கி வருகிறார்.
லோகேஷ் அந்த வகையில் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற நடிகர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீரென நடிகர் விஷால் சந்தித்தார் இதனால் தளபதி 67 படத்தில் அவர் நடிகர் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் தளபதி 67 படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஆனால் இது குறித்து படக்குழு சைடில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.