“லத்தி” படத்திலிருந்து சூப்பரான அப்டேட்டை கொடுத்த விஷால்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..

vishal-
vishal-

சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விஷால்.  அந்த வகையில் இவர் நடித்த சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன் என வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும்..

ஒரு கட்டத்திற்கு மேல் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களாக இருக்கின்றன. அதில் இருந்து மீண்டு வர அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார் ஆனால் எந்த ஒரு படமும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் சிறந்த இயக்குனர் உடன் கைகோர்த்து நல்ல படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் லத்தி மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக லத்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறார் அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் இவர் சண்டை போடுவது போல படம் உருவாக்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்கள் ராணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் வினோத் குமார் இந்த படத்தை ஒரு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் படமாக உருவாக்கி இருக்கிறாராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் லத்தி படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகும் என கூறினார். இந்த செய்தி தற்போது விஷால் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த வைரல் வீடியோவை..