கும்கி பட நடிகை லட்சுமிமேனனுடன் திடீர் திருமணமா.? பதறி அடித்து போய் பதில் சொன்ன விஷால்..

vishal
vishal

Actor Vishal: சினிமாவைப் பொறுத்தவரை பிரபலங்களின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவது வழக்கம்தான். ஆனால் தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி படாத பாடுபட்டு வருபவர் தான் நடிகர் விஷால். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக வலம் வந்த விஷால் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் முக்கியமாக இவருடைய திருமண சர்ச்சைகள் தான் அதிக அளவில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி நடிகர் விஷால் நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் செய்திகளை பரப்பி வருகிறது. எனவே இதற்கு விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் மற்றும் லட்சுமி மேனன் ஆகிய இருவரும் இணைந்து பாண்டியநாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்துவிட்டது அதன் பிறகு ஒரு படத்தில் கூட இவர்கள் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் அந்த படங்களில் நடிக்கும் பொழுதே இவர்கள் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

மேலும் சில காலங்கள் கழித்து பிரேக் அப் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சமீப காலங்களாக விஷால் மற்றும் லட்சுமிமேனன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திடீரென சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலானது. எனவே இது குறித்து தற்பொழுது விஷால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பொதுவாக என்னைப்பற்றி எந்த வதந்திகள் அல்லது போலியான செய்திகள் வெளியானாலும் நான் அதற்கு பதில் அளிப்பதில்லை.

அது பயனற்றது என்பது எனக்கு தெரியும் ஆனால் தற்பொழுது நடிகை லட்சுமி மேனனை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி பரப்பி வருவதை அடுத்து இதை நான் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனது இந்த மறுப்புக்கு காரணம் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் கெடுக்கிறீர்கள் மற்றும் அவருடைய இமேஜையும் கெடுக்கிறீர்கள் இந்த வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்.

நான் யாரை திருமணம் செய்ய போகிறேன், திருமணம் எந்த ஆண்டு, தேதி, நேரம் என்பதை கண்டிப்பாக நானே நேரம் வரும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று விஷால் கூறியுள்ளார். இவ்வாறு விஷால் மற்றும் லட்சுமி மேனனுக்கு திருமணம் நடப்பதாக கூறிய தகவல் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.