நடிகர் விஷால் 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. செல்லமே திரைப்படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம் தாமிரபரணி, மலைக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் புரட்சித் தளபதி என்ற பட்டப் பெயரும் கிடைத்தது ஜிகே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார் நடிகர் விஷால் லட்சுமி மேனன் அவர்களுடன் இணைந்து நடிக்கும் பொழுது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு விஷால் அணிஷா என்பவருடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது அதுமட்டுமில்லாமல் இவர்களின் நிச்சயதார்த்தம் 2019ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிஷா வாழ்த்துக் கூறியிருந்தார் அதேபோல் அடுத்த ஆண்டு எந்த ஒரு வாழ்த்தும் கூறாததால் இவர்களின் திருமணம் நின்று விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.
அனிஷா விஷால் மற்றும் லட்சுமி மேனன் வீடியோவை பார்த்துவிட்டு தான் திருமணத்தை நிறுத்தி விட்டார் எனவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் அனிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களளிடம் வைரலாகி வருகிறது.