சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் கூட அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்யாமல் நடிப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் குறைகின்றன அந்த வகையில் நடிகர் விஷால் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் பொழுது அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி படங்கள் தான்.
அதிலிருந்து மீண்டு வர அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார் ஆனால் எதுவும் நடந்தபாடில்லை இப்பொழுது அவரது கையில் லத்தி சார்ஜ், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை பெரிதும் நம்பி இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றி விஷால் பேசியது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..
நடிகர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன அதற்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றாக நான் எதற்கு அஜித் சார் என்று கூப்பிட வேண்டும் பல காலமாக எனக்கு அவரை நன்றாக தெரியும். அதனால் நான் அஜித் என்று தான் கூப்பிடுவேன் என்று தெள்ளத் தெளிவாக கூறியிருந்தார் மேலும் எனக்கு அவர்களும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது எனக்கு அஜித், விஜய், கமல், ரஜினி என எல்லா நடிகர்களுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..
இதை வைத்து தேவையில்லாமல் நான் பப்ளிசிட்டி தர விரும்பவில்லை எனக்கு அஜித்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார் இதன் மூலம் சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் அஜித் ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்..
மேலும் விஷாலை பற்றி நன்கு அறிந்த ரசிகர்கள் விஷாலுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் இறங்கி பேசுவீர்கள் உங்கள் பேச்சை நம்ப முடியாது எனக் கூறிய அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக பேசி வருகின்றனர். மேலும் நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழாவிலும் அஜித் கலந்து கொள்ளாமல் இருந்தது விஷாலுக்கு கடுப்பை ஏற்றி இருக்கும் அதனால் தான் இப்படி பேசுகிறார் என கூறியும் வருகின்றனர்.