அருண் விஜயின் அண்ணியை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த விஷால்.! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா.?

vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வரும் நடிகர் விஷால் தற்பொழுது தன்னைவிட 15 வயது வித்தியாசமாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு பிறகு திருமணம் செய்வேன் என்றும் உறுதியளித்து இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது வரையிலும் பொருளாதார ரீதியாக பிரச்சனை இருப்பதால் நடிகர் சங்க கட்டிடம் வேலை நடைபெறாமல் இருந்து வருகிறது. நடிகர் விஷால் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி காதலித்து வருவதாகவும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது மேலும் இவர் கூட திருமணத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்தார்கள் ஆனால் சில பிரச்சனையின் காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.

அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு அனுஷா என்ற தொழிலதிபரின் மகளை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார் அந்த திருமணமும் நடைபெறாமல் போனது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் விஷாலுக்கு 45 வயது ஆகும் நிலையில் அவர் சினிமா நடிகை அபிநயா என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடோடிகள், குற்றம் 23 உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் அபிநயா இவருக்கு காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் இவரை விஷால் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளனர். மேலும் ஒரு படத்தில் அருண் விஜய்க்கு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை பொதுவாக விஷால் ஒருவரிடம் பேசினால் அவருடைய வசதியை பார்த்து தான் பழகுவாராம் ஆனால் அபிநயா என்ற நடிகை சாதாரண நடிகை எனவே இவரை விஷால் திருமணம் செய்து கொள்வார் என்பது நம்ப முடியவில்லை.