நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஷால், ஷர்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, ரோபோ சங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா என பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை விஷால் பிலிம் பக்டரி சார்பில் விஷாலே தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம் அதற்காக குட்டி டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய்யின் பிறந்தநாளில் விஷால், விஜய் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ட்ரீட் கொடுத்துள்ளார்.