விஷாலுக்கு கைகொடுத்ததா சக்ரா திரைப்படம்.! இதோ திரைவிமர்சனம்…

vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் தற்போது சக்கரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கில் வந்துள்ளது. சக்ரா பல தடைகளை தாண்டி வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஷரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. மேலும் இந்த  திரைப்படத்தை அறிமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை:

சுதந்திர தினத்தில் சென்னையில் உள்ள ஒவ்வொரு வீட்டிலேயும் கிட்டத்தட்ட 50 வீட்டில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அதில் மிலிடரியில் இருக்கும் விஷால் வீடும் ஒன்று. கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் விஷாலின் தந்தை வாங்கிய சக்ரா மெடலையும் கொள்ளையடித்து விடுகிறார்கள் அதனால் விஷால் ராணுவத்திலிருந்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக சென்னை வருகிறார்.

vishal chakra
vishal chakra

கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக விஷால் தன்னுடைய ராணுவ உத்தியை பயன்படுத்துவது ரசிகர்களை ரசிக்கும்படி அமைந்துள்ளது.  மேலும் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விஷாலுக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார்.

அது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ரெஜினா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களை மெர்சல் ஆக்கிவிட்டார்.  மேலும் ஸ்ருத்தி டங்கே,  விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

விஷாலின் சக்ரா திரைப்படம்  அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் சென்டிமென்ட் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. சொல்லப்போனால் சக்ரா ஒரு  அதிரடி திரைப்படம் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இருந்தாலும் இரண்டாவது பாதியில் படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் சக்ரா திரைப்படம் இரும்புத்திரை திரைப்படம் போலவே உள்ளதால் கொஞ்சம் யூகிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது அதனால் படத்தில் கொஞ்சம் மைனஸ் ஆக அமைந்து விட்டது.