OTT யில் ரிலீஸ் ஆகிறதா விஷாலின் அதிரடி ஆக்சன் திரைப்படம்.?

vishal-news
vishal-news

நடிகர் விஷால் சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார், மேலும் தற்பொழுது சக்கரா மற்றும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் விஷால் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஷாலின் சக்கரா திரைப்படம் தான் முதலில் வெளியாக இருக்கிறது, சக்கரா திரைப்படத்தை எம்எஸ் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார் மேலும் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது, படத்தில் விஷால் ஒரு ராணுவ அதிகாரியாகவும் ஷ்ரத்தா  ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது,.

இந்த நிலையில் விஷாலின் சக்கரா திரைப்படம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருவது என்னவென்றால் அமேசான் ப்ரைமில் நேரடி OTT யில் சக்கரா  திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என கூறப்படுகிறது ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தில் ரெஜினா கஸன்ட்ரா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோரும் நடித்துள்ளார்கள் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார்.