தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விபச்சாரத்தை பெற்று வந்தது இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அவர்கள் தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியதாக சில தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது நடிகர் விஷால் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்க மதுரை அன்புச் செழியன் அவர்களிடம் 21 கோடியே 29 லட்சம் கடனாக வாங்கி இருக்கிறார்.
அந்தக் கடனை விஷால் கொடுக்க முடியாத அளவிற்கு தள்ளப்பட்டார் இதனை ஏற்றுக்கொண்ட லைக்கா நிறுவனம் அந்த தொகையை செலுத்தியது அதன் பிறகு விஷாலிடம் லைக்கா நிறுவனம் ஒரு ஒப்பந்தமும் போட்டு இருக்கிறது அதாவது விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை வழங்குவதற்காக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கிடையில் விஷால் அவர்கள் தனது தயாரிப்பில் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை லைக்காவின் அனுமதி இல்லாமல் வெளியிட்டு இருக்கிறார் இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற லைக்கா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிபதி நடிகர் விஷால் ரூபாய் 15 கோடியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று விஷாலிடம் உத்தரவிட்டு இருக்கிறது அதுமட்டுமல்லாமல் சொத்து பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இதனை செய்யாவிட்டால் தனி நீதிபதி அமர்வில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை தியேட்டர்களிலோ அல்லது ஓடிடி-யிலையோ வெளியிட தடைவிதித்தது. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அடுத்ததாக விஷால் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.