தமிழ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். அவர் துப்பரிவாலன் முதல் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.அவரை சுற்றி தற்போது பலவகையான பிரச்சினைகள் வந்துள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கத்திற்கும் இடையே விஷால் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார் என்பது நாம் ஊரறிந்த விஷயமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினுடன் விஷால் அவர்கள் சண்டைபோட்டு மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பினார்.இந்த நிலையில் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அவர்கள் கார்த்தியை ஒரு புதிய படத்தில் கமிட் செய்தார். ஆனால் அவரோ சுல்தான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனால் படத்தில் நடிக்க முடியாமல் போனது இதனை அடுத்து அவர் தற்போது விஷாலிடம் கதையை கூறியுள்ளார்.
கார்த்திக் தங்கவேல் படத்தில் நிச்சயம் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு என்ற ஒரு சிறந்த படத்தை எடுத்து இருந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இதனையடுத்து அவரை நம்பி இறங்கி உள்ளார் விஷால்.
இப்படத்தை ஆடுகளம் படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.