சினிமா துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஷால் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் நடிகர் விஷால் தனது அப்பா தயாரித்த ஒரு சில திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தாலும் தற்போது வரை தனக்கென ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் அதிலும் குறிப்பாக இவர் நடித்த ஆம்பள திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது மேலும் இவர் சண்டக்கோழி தாமிரபரணி போன்ற பல திரைப்படங்களில் நடித்த பொழுது மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
என்னதான் நடிகர் விஷால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் சிறு வயதிலேயே பல நடிகர்களை போல குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆனால் இவருக்கு முதல் திரைப்படம் செல்லமே கிடையாது என்று தற்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது.
ஆம் நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாக செல்லமே திரைப்படத்தில் தான் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்று பலரும் நம்பி வருகிறார்கள்.ஆனால் நடிகர் விஷால் இதற்கு முன்பே பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம்.
இந்த திரைப்படத்தில் பாண்டியராஜ் உடன் இவர் ஒரு சில நொடிகளுக்கு நடனம் ஆடுவார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கூட தற்போது கசிந்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டிராஜ் திரைப்படத்திலேயே நீங்க நடித்து வந்து விட்டீர்களா இத்தனை நாளா இது தெரியாம போச்சே என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.