மார்க் ஆண்டனி இயக்குனரை “பரதேசி” என்று சொன்ன விஷால் – மேட்டர் இதுதானா.? கொந்தளித்த நெட்டிசன்கள்

mark antony
mark antony

Vishal : அஜித், விஜய் லெவலுக்கு பேசப்பட்ட நடிகர் விஷால். இவர் சமீபகாலமாக நடித்த அரை டசன் படங்கள் தோல்வி மட்டுமே அமைந்துள்ளது இதிலிருந்து மீண்டு வர நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் தற்போது நடித்துள்ளார். இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

படம் முழுக்க முழுக்க டைம் மிஷினை வைத்து படம் உருவாகி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து சுனில், செல்வராகவன், ரித்து, அபிநயா, கிங்ஸ்லி, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

மார்க் ஆண்டனி  படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியது. அடுத்ததாக வந்த “ஆதிருதா” பாடலும் பட்டையை கிளப்பியது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி விழாவில் விஷால் பேசும் போது இந்த பரதேசி ஆதிக் ரவிச்சந்திரன் யாருன்னு…

மார்க் ஆண்டனி காட்டும் என உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஷால்.. பிறகு ஆதிக் என் தம்பி போல அவனுக்குள்ள ஏகப்பட்ட திறமை இருக்கு என அப்படியே தனது இயக்குனரை பாராட்டினார். இதை பார்த்த பலரும் மேடையில் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை.

தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை பரதேசின்னு பேசலாமா எனக்கூறி நெட்டிசன்கள் விஷாலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். விஷால் இதுபோல பேசுவது இது முதல் முறையல்ல பல தடவை இப்படி வார்த்தைகளை விட கூடியவர் எனவும் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.