மாமன்னன் பட நடிகையை “பரதேசி” என கூப்பிட்ட விஷால்.! கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

Vishal
Vishal

Vishal : சினிமா உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வகையில் நடிகர் விஷால் செல்லமே படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு சண்டக்கோழி, மலைக்கோட்டை, திமிரு என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி வெற்றிகரமாக ஓடினார்.

இதனால் அஜித், விஜய்க்கு அடுத்த நபர் விஷால் தான் என பெயர் எடுத்தார். ஒரு கட்டத்தில்  சங்க தலைவராக போட்டியிட்டு ஜெயித்தார் அதன் பிறகு அதிலேயே அதிகம் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க முடியாமல் போனது. அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து தான் பார்க்கிறார்.

கடைசியாக கூட எனிமி, லத்தி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் வெளிவந்து சுமாராக ஓடின இதனால் வெற்றி கொடுக்க தற்பொழுது போராடி வருகிறார். விஷால் கைவசம் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2, விஷால் 34 ஆகிய மூன்று படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் எப்படி நக்கல் நையாண்டி விஷால் பண்ணுவாரு அதே போல் தான் நிஜத்திலும் கொஞ்சம் நக்கலாக தான் பேசக்கூடியவர் விஷால்.

இந்த நிலையில் விஷால் பற்றி மாமன்னன் பட நடிகை ரவீனா ரவி சமீபத்திய youtube சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அப்பொழுது பல நடிகர்களுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குறித்து சில வார்த்தைகள் பேச சொன்னார்கள் அப்படி விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து இவர் பேசியது விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகைசூடும் படத்தில் டப்பிங் கலைஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

raveena ravi
raveena ravi

வீரமே வாகைசூடும் படப்பிடிப்பின் போது விஷால் என்னை “பரதேசி” என்று அழைப்பார். ஏன் அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை ஆனால் அவர் என் மீது அதிக அக்கறை காட்டுவார் விளையாடுவார் ஆனால் அவரை போன்ற ஒருவரை இதுவரை என்னால் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நடிகையை இப்படியா கூப்பிடுவது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.