நடிகர் விஷால் மற்றும் ஆர்யா 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியாகிய அவன் இவன் என்ற திரைப்படத்தில் சகோதரர்களாக நடித்தார்கள், அதன்பிறகு இருவரும் நீண்ட வருடங்களாக இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது அதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இருவரும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் அதனால் அடிக்கடி அவ்வப்பொழுது இருவரும் படங்களில் தலைகாட்டி வந்தனர், இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா மிரட்டலான கதை ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை விக்ரம் திரைப்படமான இருமுகன் திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார், இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்மாஸ் புகழ் மிருனாளினி என்பவரும் வில்லனாகவும் ஆர்யா மிரட்டல் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப் படத்திற்கு டைட்டிலாக ‘எனிமி’ என வைத்துள்ளார்கள்.
படத்தின் டைட்டில் ‘எனிமி’ என வைக்கப்பட்டுள்ளதால் இருவரும் நண்பர்களாக இருந்து எதிரிகள் அவர்கள் என கதை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.