தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தற்பொழுது உள்ள பல நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் என்று கூறலாம். ஏனென்றால் சிம்பு நல்ல கதையாக இருந்தாலும் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் கதை சரியில்லை நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விடுவார்.
அந்த வகையில் இவர் நடிக்கமாட்டேன் என்று கூறிய பல படங்களின் லிஸ்ட் உள்ளது. அந்தப் படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவார்கள். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடும்.
இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறியதால் ஒருகாலத்தில் சுத்தமாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகும் சில பிரச்சினைகளிலும் மாட்டிக் கொண்டார். தற்பொழுது தான் அதிலிருந்து வெளிவந்து தற்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் வேண்டாம் என்று சமீபத்தில் கூறிய திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தார். பிறகு தான் தனுஷ் நடித்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் திமிரு. இத்திரைப்படத்தை இயக்குனர் தருண்கோபி இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க இருந்தார் பிறகு அவர் கதை சரி இல்லை வேண்டாம் என்று கூறியதால் விஷால் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றியை பெற்றது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஞானவேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.