வெளிநாடு சென்று கப்பலில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள கார்த்தி மற்றும் அதிதி.! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் கார்த்திக் விருமன் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது இத்திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதன் காரணமாக சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் மிகவும் சுவாரசியமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

இப்படிப்பட்ட நிலையில் விருமன் திரைப்படம் கிராம கதையினை மையமாக வைத்து உருவாகியிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்சாக பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ளார்.

முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகும் அதிதி ஷங்கர் ரசிகர்களின் மத்தியில் தனது பேச்சியினால் பிரபலமடைந்துள்ளார். இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வரும் நிலையில் தற்போது மலேசியாவில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக பட குழுவினர்கள் சென்றுள்ளார்கள்.

karthik
karthik

அந்த வகையில் மலேசியாவில் கார்த்திக் மற்றும் அதிதி சங்கர் எடுத்துக்கொண்ட மிகவும் ஸ்டைலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் மலேசியா வினைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக இன்னும் சில நாடுகளுக்கும் செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

atithi sangar

அதிதி ஷங்கர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் எனவே கார்த்திக் சமீப பேட்டி ஒன்றில் படிப்பு வரவில்லை என்பதற்காக சினிமாவில் வருபவர்கள் அதிகம் ஆனால் படித்துவிட்டு இவ்வாறு சினிமாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என அதிதி சங்கரை பாராட்டி இருந்தார்.