“விருமன்” படத்தின் வெற்றியைக் கொண்டாடும் படக்குழு – காசை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்.!

viruman

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இவர் இதுவரை  நடித்த படங்கள் அனைத்தும்  வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இப்பொழுது விருமன் திரைப்படம் இணைந்துள்ளது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.

இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதுவும் கார்த்திக்கு ஜோடியாக முதல் படத்திலேயே நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், சிங்கம் புலி, மைனா நந்தினி, மனோஜ், சூரி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும்.. கலந்த கலவையாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை பாசிட்டிவான விமர்சனமும் பெற்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு நாள் முடிவில் விருமன் திரைப்படம் சுமார் 16.70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றனர். விருமன் படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் அடித்து ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் படக்குழு..

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக சுமார் 25 லட்சத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கி உள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள். ரசிகர்களும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

viruman
viruman
viruman