சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் சூர்யாவின் தம்பி கார்த்தியும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம்.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையில் காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் அற்புதமாக கடந்து இருந்தது மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன்.
மற்றும் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், மைனா நந்தினி, சூரி, சிங்கம்புலி, மனோஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து அசத்தினர் படம் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தொடர்ந்து வசூல் பேட்டை நடத்தி வருகிறது. அண்மையில் வெளிவந்த கார்த்தி படங்களில் இதுதான் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் செய்த கார்த்தியின் விருமன் திரைப்படம்.
அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தியின் விருமன் திரைப்படம் 6 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் 6 நாள் முடிவில் மட்டுமே கார்த்தியின் விருமன் திரைப்படம் சுமார் 46 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது முதல் இரண்டு நாட்களிலேயே இந்த படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியதை கண்ட படக்குழு வெற்றி விழா கொண்டாடியது.
தற்போது தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் படக்கு mழுவும், கார்த்தியும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இன்று தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இது கார்த்தியின் விரும்பன் படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.