வருடம் வருடமாக ஆசிய கோப்பை நடத்தப்படுகிறது அப்படி அண்மையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்பட்டது ஆரம்பத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாண்டும் சூப்பர் போரில் தொடர்ந்து இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிச்சுற்றுக்கு போக முடியாமல் வெளியேறியது இந்திய அணியில் நல்ல பேட்டர்கள் இருந்தாலும்..
பௌலிங் சொல்லு கொள்ளும்படி சிறப்பாக வீசாததால் இந்திய அணி தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது இருப்பினும் ஆசிய கோப்பையில் சிறப்பாக இந்திய வீரர்கள் விளையாண்டனர் ஆதன் காரணமாக ஐசிசி T20 தரவரிசை பட்டியலில் ஒரு சில இந்திய வீரர்கள் முன்னேறி உள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
ஆசிய கோப்பையில் இந்திய அணியின் சார்பாக அதிக ரன்கள் அடித்தவர் விராட் கோலி 276 ரன்கள் அடித்தார் அதில் ஒரு சதம் அடங்கும் இதன் மூலம் விராட் கோலி 14 இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை பிடித்துள்ளார் இந்த பட்டியலில் ரோகித் சர்மா 14-வது இடத்தில் இருக்கிறார் இந்தியர்களில் அதிகபட்சமாக சூரிய குமார் யாதவ் 4 வது இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் ஆல் ரவுண்டராக விளையாண்ட ஹர்திக் பாண்டியா ஐசிசி T20தரவரிசை பட்டியலில் ஆல் ரவுண்டர் லிஸ்டில் 6 -வது இடத்தில் இருக்கிறார். ஆசிய கோப்பையில் தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும் சூப்பராக பந்து வீசிய அதிக விக்கெட் வீழ்த்தியவர் புவனேஸ்வர் குமார் இவர் ஐசிசி T20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் புவனேஸ்வர் குமார் 11ஆவது இடத்திலிருந்து முன்னேறி 7 – வது இடத்திற்கு வந்துள்ளார்.
ஐசிசி T20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டாலும் ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி ருசிக்காதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இருப்பினும் உலக T20 போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக்கிறது.