வாரிசு! வெற்றியின் வாரிசு!! குதூகலத்தின் வாரிசு!! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியோ அனுப்புகிறேன் வாழ்த்தாக.!! நடிகர் பார்த்திபனின் வைரல் ட்விட்..

varisu
varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து நடிகர் விஜய். இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் வாரிசு படத்தை  தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடல் மற்றும் தீ தளபதி பாடல் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான அம்மா பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது முடிந்தது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்கள் முன்பு ஒரு குட்டி ஸ்டோரி மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடி நடனம் ஆடினார்.

நடிகர் விஜய் பேசிய வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வரும் நிலையில் இதனை பல சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு தூணாக இருக்கும் நடிகர் பார்த்திபன் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை குறிப்பிட்டு வாழ்த்துகள் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “வாரிசு! வெற்றியின் வாரிசு! குதூகலத்தின் வாரிசு! கொண்டாட்டத்தின் வாரிசு! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியோ அனுப்புகிறேன் வாழ்த்தாக!!! மேலும் ரஞ்சிதமே பாடல் முந்தைய வசூல் சாதனையை மிஞ்சிடுமே!!!” என்று பதிவிட்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிவி பிரகாஷ் இசையமைத்த செலப்பிரேட் வீடியோவை வெளியீட்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இந்த பதிவு ரசிகர் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த பதிவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். இதோ நடிகர் பார்த்திபன் போட்ட பதிவு.