தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஏகே 61’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலைகள் இடைவேளை கிடைக்கும்போதெல்லாம் அஜித் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கூட பைக்கில் தனியாக இமயமலை சென்ற அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் ஏகே 61 படத்தில் படப்பிடிப்பு என்னாச்சு என பலர் கேள்வி எழுப்பி வருகிறவர்கள். ஏனென்றால் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வராத காரணத்தினால் அஜித் பைக் ரேஸ் சென்று விடுவதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மறுபக்கம் சமீபத்தில் தமிழ் சினிமா பைனான்சியர்கள் வீட்டில் நடைபெற்ற அதிரடி ஐடி ரைட் காரணமாக பல தயாரிப்பாளர்கள் படங்களுக்கு பணம் இல்லாமல் தற்பொழுது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்களாம். இதனால் தான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலைகள் எச்.வினோத் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையை துவங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.ஆம்,அதாவது விஜய் சேதுபதியை வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை உருவாக்கப்பட இருப்பதாகவும் அதன் ப்ரீ பணிகளை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நேரில் சந்தித்த ஹச் வினோத் இதனைப் பற்றி விஜய் சேதுபதியிடம் கூற அதற்கு விஜய் சேதுபதி நீங்கள் முதலில் ஏகே 61 படத்தை முடித்துவிட்டு வாருங்கள் அதன் பிறகு இந்த படத்தினை பார்த்துக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டாராம்.தற்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே இருக்கிறார்.