இயக்குனர் ஹெச் வினோத் அண்மை காலமாக நடிகர் அஜித்துடன் ட்ராவல் பணி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் இவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது அஜித்தின் 61வது படத்தையும் எடுத்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களும் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் ஹச். வினோத்தும் சரி அஜித்தும் சரி AK 61.. படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், சமுத்திரகனி, நடிகர் வீரா, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் செல்ல இருக்கிறது. அதற்கு முன்பாக அஜித் லடாக் பயணம் மேற்கொண்டார் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகின மேலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த படகுழுவும் நேற்று ஆறு முப்பது மணிக்கு AK 61 படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை ரிலீஸ் செய்தது.
இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டர் செம மாஸ் ஆக இருந்து வந்துள்ளதால் தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் நகரும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹச் வினோத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு..
படம் நின்னு பேசும் கவலைப்படாதீர்கள் என ட்விட் போட்டு உள்ளார் அதிகம் தனது படத்தைப் பற்றி பேசாத ஹச் வினோத் முதல் முறையாக தனது படம் குறித்து அவர் இவ்வாறு சொல்லி உள்ளது ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது தற்போது ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர்.