உங்களுக்கு சரியான டைரக்டர் நான் தான் நிரூபித்து காட்டிய ஹச். வினோத்.! மிரட்டிவிட்ட அஜித்தின் 3 படங்கள்

Ajith
Ajith

H. Vinoth and Ajith : இயக்குனர் ஹச் . வினோத் சமூகத்திற்கு தேவையான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி அமைத்தார்.

ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டது இதில் அஜித் நடிக்க ஹச் வினோத் இயக்கினார் படம் வெளியாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 215 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாஸ் காட்டியது இன்றும் இந்த படத்தை பற்றிய பலரும் பாசிட்டிவாக பேசி வருகின்றனர்.

உடனே இந்த ஜோடி அடுத்த படத்தில் இணைந்தது. வலிமை என பெயர் வைத்தனர். அந்த நேரத்தில் கொரோனா பிரச்சனையின் காரணமாக படத்தின் சூட்டிங் சரியாக எடுக்க முடியவில்லை, தள்ளிக் கொண்டே போனது மேலும் ஊரடங்கு பிரச்சனை இருந்ததால் பிளான் பண்ணியப்படி ரீலிஸ் செய்ய முடியவில்லை.  நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 250 கோடிக்கு மேல் வசூலி வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் , ஹச் வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவானது. சொல்லப்போனால்  ஹச் வினோத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம். பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிகாட்டியது. ஆடியன்ஸ்க்கு ரொம்ப பிடித்து போகவே அதிக நாட்கள் ஓடியது.

துணிவு படம் வசூல் ரீதியாக 350 கோடி வசூலித்தது. OTT தளத்தில் கூட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த மூன்று படங்களும் சேர்ந்து உலக அளவில் 815 கோடி வசூல் செய்தது. இந்தக் கூட்டணி மீண்டும் சேர்ந்தால் கூட ரசிகர்கள் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்.