vinnaithandi varuvaya first actor choice : சிம்பு திரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய திரைபடம் விண்ணைத்தாண்டி வருவாயா, மேலும் இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார்.
இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, அது மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் சிம்பு தமிழ் சினிமா திரை உலகில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
வின்னைதாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்புவின் கார்த்திக் கதாபாத்திரமும் திரிஷாவின் ஜெஸ்ஸி கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், அதுமட்டுமில்லாமல் சிம்புவுடன் இணைந்து நடித்த விடிவி கணேஷ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.
அதிலும் வீடிவி கணேஷ் ஒரு காட்சியில் ‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா’ என்று வசனம் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் விடிவி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது காமெடி நடிகர் விவேக் தான்.
ஆனால் விவேக் கால் சீட் கிடைக்காததால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் விவேக் நடிக்க முடியாமல் போனது அதன்பிறகுதான் வீடிவி கணேஷிடம் அந்த கதாபாத்திரம் சென்றது விடிவி கணேஷ் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.