ரஜினிக்கு வில்லனாக மிரட்டிய விநாயகத்திற்கு சம்பளத்தை கிள்ளி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.! அட இத்தனை லட்சம் தானா..?

vinayakan
vinayakan

Jailer vinayakan: தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகியது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இயக்கியிருந்தார் இதற்கு முன்பு நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் விநாயகன் ஜாக்கி சரோப் சிவராஜ் குமார், யோகி பாபு, தமன்னா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே 100 கோடி வசூலை எட்டியது.

அதற்கு காரணம் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது அதிலும் தமிழகத்தில் குறிப்பாக 1100 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது அப்படி இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 400 கோடியை எட்டிவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் எவ்வளவு இம்பார்ட்டண்ட் கொடுத்து நெல்சன் இயக்கியுள்ளாரோ அதைவிட ஒரு மடங்கு மேலாக வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் வில்லனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட விநாயகம் பிளாக் மெர்குரி என்ற பெயரில் ஒரு நடன குழுவை நடத்தி வந்தவர்.

பிறகு பின்னணி பாடகர் இசையமைப்பாளர் நடன இயக்குனர் என பல திறமைகளை கொண்ட இவர் தமிழை தாண்டி மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்க திரைப்பட விருது, சினிமா பாராட்டி சோ கிளப்சினி விருது என பல விருதுகளை வென்றுள்ளார் தமிழ்ழில் விஷால் நடிப்பில் வெளியாகிய திமிர் என்ற திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு அடியாட்களாக மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் சிலம்பாட்டம், காள, சிறுத்தை, மரியான் என பல திரைப்படங்களில் நடித்திருந்த விநாயகன் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் இந்த நிலையில் இவர் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக விநாயகன் 35 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இது எந்த அளவு உறுதியான தகவல் என்று தெரியவில்லை ஆனால் தற்பொழுது இணையதளத்தில் கடுமையாக வைரலாகி வருகிறது.