நடிகர் வினய் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் வினய் நடிப்பில் வெளியான மோதி விளையாடு, ஜெயம் கொண்டம், மிரட்டல், என்றென்றும் புன்னகை, போன்ற படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
நன்றாக பயணத்தி இருந்தாலும் சிறிய இடைவேளைக்கு பிறகு நடிகர் வினய் தனது திறமையை நன்றாக வளர்த்து கொண்டு வில்லன் கதாபாத்திரங்கள் நடிக்க ஆரம்பித்தார். நல்ல கதைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து நடித்தால் தற்போது அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார்.
முதலில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்து வினய் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அதனை தொடர்ந்து இவர் வில்லன் ரோலில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லன் ரோலில் மிரட்டினார்.
அதனை தொடர்ந்து இப்பொழுது கூட ஓ மை டாக் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இப்படி சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி நடை கண்டு வரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நடிகை வேறுயாருமல்ல விமலா ராமன் தான் தென்னிந்திய சினிமா உலகில் பல மொழி படங்களில் நடித்து வருகிறார் தமிழில் கூட இவர் ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்து அசதினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை விமலா ராமன் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வரும் நடிகர் வினையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.