தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தற்பொழுது ‘துடிக்கும் கரங்கள் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரிக்க வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பிறகு பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. அதோட மட்டுமல்லாமல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்த படத்தின் கதை இருக்கும் எனவும் முழுக்க முழுக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த படம் உருவாகியுள்ளது போல தெரிய வருகிறது.