sooriya kanth உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதில் என்ன ஒரு கவலை என்றால் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இந்த நிலையில் சினிமா துணை நடிகர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கி இருக்கிறார்கள். நடிகர் இயக்குனருமான பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூரியகாந்த்.
இவர் பாரதிராஜாவின் மண்வாசனை கிழக்குசீமையிலே என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஏராளமான திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், கடைசியாக இவர் கார்த்தியின் கைதி விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் தற்பொழுது மிகவும் கஷ்டப்படுவதாக அவரே கூறியுள்ளார், எந்த ஒரு பட பிடிப்பும் இல்லை, சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை அதனால் பொருளாதார ரீதியாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், எனக்கு ஒரு மாதத்திற்கு மருந்து மாத்திரை வாங்கவே 1500 செலவாகிறது.
இப்பொழுது வருமானத்திற்கு வழி இல்லாமல் அதை கூட வாங்கி சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறேன் தயவுசெய்து உதவுங்கள் என கூறியுள்ளார்.
இவ்வாறு தெரிவித்தது சினிமா பிரபலங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் இவர்ரின் நிலையை பார்த்து பரிதாபப் படுகிறார்கள். இவருக்க இந்த நிலைமை என வருதபடுகிரார்கள்.