தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி அவர்தான் நடிகர் பசுபதி. இவ்வாறு இவர் திரைப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அந்த வகையில் நடிகர் பசுபதி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் தன்னுடைய கொடூரமான பார்வை மற்றும் சத்தமான பேச்சு ஆகியவற்றை வைத்து திரை உலகில் மிரட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்த கதாபாத்திரமான பட்டாசு பாலு கஜபதி நாராயணன் போன்ற கதாபாத்திரங்களை இன்றும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்தவகையில் வில்லத்தனமான நடிப்பு மட்டுமே வழிகாட்டி வந்த பசுபதி தற்போது துணை கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்திலும் தலைகாட்டி வருகிறார்.
அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரன் என்ற திரைப்படத்தில் கூட காமெடி கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இவருடைய கதாபாத்திரம் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பசுபதி சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு மகளுக்கு தந்தையான நமது பசுபதி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகளுடன் ஊர்சுற்றும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படமானது வைரலாக பரவி வருகிறது.