தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பொங்கலில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பொங்கலில் ரிலீசாக உள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகுவதில் சில சிக்கல்கள் இருந்தது அதை எல்லாம் தீர்த்து முடித்த வாரிசு பட குழுவினர் பொங்கலில் வெளியிட உள்ளனர்.
இதனை அடுத்து நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நான்கு வில்லன்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க போகும் சஞ்சய் தத் லோகேஷிடம் இரண்டு கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். இந்த கண்டிஷனை கேட்ட லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி சஞ்சய் தத் என்ன கண்டிஷன் போட்டு உள்ளார் என்றால். படப்பிடிப்பு தளத்திற்கு என்னுடன் 25 நபர்கள் கூடிய படையோடு தான் வருவார்களாம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் டெக்னீசியன்கள், நடிகர்களை விட இவருடைய படைவீரர்கள் தான் அதிக நபர்கள் இருப்பார்கள்.
அதன் பிறகு இன்னொரு கண்டிஷன் போட்டது தான் லோகேஷ் கனகராஜ்க்கு பெரும் அதிர்ச்சியாகி உள்ளது. அதாவது சஞ்சய் தத் இரவு நேரத்தில் மட்டும் எந்த காட்சிகளாக இருந்தாலும் அதை பகலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே இரவு நேரத்தில் தான் அதிகம் காட்சிகள் இருக்கும். அப்படி இருக்கையில் சஞ்சய் தத் பகலில் மட்டும் காட்சிகளை எடுக்க சொன்னதும் லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சையாகி உள்ளதாக தகவல் வழியாக உள்ளது.