கணவனை தோளில் சுமந்து ஊரை வலம் வந்த மனைவி.! அடப்பாவிகளா இப்படியும் ஒரு தண்டனையா.! வைரலாகும் வீடியோ

wife
wife

மத்திய பிரதேசத்தில் ஜாபுவா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பழங்குடி பெண் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, அந்த பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார், மாமனார் அனைவரும் அவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் ஓடிவிட்டதாக சந்தேகமடைந்தார்கள்.

இதனை அடுத்து தனது மனைவியை காணவில்லை என்ன கல்யாணபுரம் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார், அதேபோல் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை எப்படியாவது கண்டுபிடித்து புகாரை திரும்பப் பெற வேண்டுமென எண்ணி மகளை கண்டுபிடித்து புகாரைத் திரும்பப் பெற காவல்நலையம் அழைத்து சென்றுள்ளார்கள்.

அதன் பிறகு அந்தப்பேன்னை கணவனிடம் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவரது சொந்த கிராமமான கல்யாண புறாவுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அப்பொழுது அவர்களை தடுத்து நிறுத்தினார்கள் கணவன் வீட்டில் இருக்கும் மாமனார் மற்றும் மாமியார், அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு நூதன தண்டனை ஒனறை கொடுத்துள்ளார்கள்.

அதாவது இதேபோல் ஏதாவது தவறு செய்தால் கணவனை தோளில் சுமந்தபடி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் நடந்து வரவேண்டும் என தண்டனை கொடுத்துள்ளார்கள் அதன்படி அந்தப் பெண் தன்னுடைய கணவனை தோளில் சுமந்து ஒவ்வொரு தெருவாக நடந்து வந்துள்ளார், இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கிராமத்தில் தவறு செய்த பெண் தன்னுடைய கணவனை தோளில் சுமந்து ஊரை வலம் வர வேண்டும் அப்படி வளம் வந்தால் மட்டுமே கிராமத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது, இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவர் உட்பட இன்னும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேர்களை கைது செய்துள்ளார்கள்.

தவறு செய்தால் இப்படி ஒரு தண்டனை கொடுக்க முடியுமா இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறுகிறார்கள்.