தமிழ் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டி அசத்துவர் சிவாஜிகணேசன் அவருக்கு பிறகு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பெரும்பாலும் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவரது படத்தை பார்க்க..
தனி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர் அந்த வகையில் இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கை கொடுத்து நடித்து வருகிறார்.
ஆனால் எந்த ஒரு படமும் இதுவரை ரிலீசாகாமல் உள்ளேயே இருக்கின்றன இவரது கையில் தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என மூன்று படங்கள் கையில் இருக்கின்றன.
இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எல்லா வேலைகளையும் முடித்து ஒரு வழியாக செப்டம்பர் 30-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவுறுத்தி உள்ளது. அதேபோல துருவ நட்சத்திரமும் இறுதிகட்ட படப்பிடிப்பு நோக்கி நகர்ந்துள்ளது வெகுவிரைவிலேயே முடித்துவிட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரையரங்கிற்கு கொண்டுவந்து விடுவோம் என கூறுகிறது.
அதேபோல கோப்ரா படம் வெகுவிரைவிலேயே முடித்துவிட்டு வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த வருடத்தில் விக்ரமின் மூன்று திரைப்படங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த மூன்று திரைப்படங்களும் ஒவ்வொன்றிலும் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளதால் மக்களுக்கு இந்த படம் நல்லதொரு தீனி போடும் என பார்க்கப்படுகிறது