வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகராக வலம் வந்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் விக்ரம் இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தொடர்ச்சியாக தோல்வியை தந்து கொண்டிருந்தது.
தமிழ் திரையுலகில் நடித்து வந்த நிறைய பிரபலங்கள் இவரை ராசியில்லாத நடிகர் என கூப்பிட ஆரம்பிக்க இவர் ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வந்தார் இருப்பினும் இவருக்கு சேது திரைப்படத்தின் மூலம் தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்று தான் கூறவேண்டும் சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இவர் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.
தற்பொழுதும் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவர் நடிப்பில் உருவாகும் கோப்ரா, சியான் 60போன்ற திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பார்கள் ஆனால் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள்,நடிகைகளின் சொத்து மதிப்பு பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது விக்ரமின் சொத்து மதிப்பு இதுதான் என ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதில் விக்ரமின் முழு சொத்து மதிப்பு சுமார் 120 கோடி முதல் 150 கோடி வரை என கூறப்படுகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவலா என்பதுதான் தெரியவில்லை மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இத்தனை கோடி வரைதான் சொத்து மதிப்பா என சந்தேகத்துடன் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.