பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸா?

vikram
vikram

Rashmika Mandanna: கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது கலக்கி வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. சுல்தான் படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது.

மேலும் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது மேலும் தமிழ் ஹீரோ உடன் கைகோர்த்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இளம் வயதான ராஷ்மிகா மந்தனா 57 வயது நடிகருக்கு ஜோடி போட இருக்கிறாராம்.

எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஏராளமான நடிகைகள் தன்னைவிட அதிக வயது வித்தியாசம் இருக்கும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பது வழக்கம் தான். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க இருக்கிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் ஜூட் ஆண்டனி ஜோசப் புதிய படம் ஒன்றை உருவாக்க இருக்கிறாராம். அந்த வகையில் பான் இந்திய படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க கம்மிட்டாகி உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தினை பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.